Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விஷால் மெகா மார்ட் பங்கு 49 சதவீதம் உயர வாய்ப்பு

விஷால் மெகா மார்ட் பங்கு 49 சதவீதம் உயர வாய்ப்பு

செயல்பாட்டு லாபம் 4.4% உயர்ந்து ரூ.410 கோடியை எட்டியது.

பகிரவும் WhatsApp Facebook

பண்டிகைக்கால விற்பனை அதிகரிக்கும் எதிர்பார்ப்பில், விஷால் மெகா மார்ட் பங்குக்கு ரூ.134 இலக்கு விலையுடன் வாங்கலாம் என்ற பரிந்துரையை ஜேஎம் பைனான்சியல் தொடர்ந்துள்ளது.

2026–27 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 14% உயர்ந்து ரூ.3,400 கோடியானது. நிகர லாபம் 3.7% அதிகரித்து ரூ.160 கோடியாக இருந்தது. செயல்பாட்டு லாபம் 4.4% உயர்ந்து ரூ.410 கோடியை எட்டியது.


ஆடை விற்பனை 9.5%, நுகர்பொருள் விற்பனை 18.2% வளர்ந்தன. நிறுவனத்தின் கடைகள் எண்ணிக்கை 844 ஆக அதிகரித்துள்ளது.
அடுத்த காலாண்டில் ஒரே கடைகளின் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என நிர்வாகம் எதிர்பார்க்கிறது. ஆண்டுதோறும் 100க்கும் மேற்பட்ட புதிய கடைகளைத் திறக்கவும் திட்டமிட்டுள்ளது.


அதிகரித்த செலவுகளால், அடுத்த மூன்று நிதியாண்டுகளுக்கான லாப மதிப்பீடுகளை ஜேஎம் பைனான்சியல் 2–3% குறைத்துள்ளது. முதல் அரையாண்டின் முடிவில் நிறுவனத்தின் நிகர ரொக்கம் ரூ.2,330 கோடியாக இருந்ததும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பங்கு சுமார் 49% உயரக்கூடும் என்பது தரகு நிறுவனத்தின் மதிப்பீடாகும்.

முந்தைய செய்தி
Fusion CX பங்குகள் 5.54 சதவீத உயர்வுடன் அறிமுகம்
அடுத்த செய்தி
IHCL நிகர லாபம் 19.35% உயர்வு

தொடர்புடைய செய்திகள்