Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

IHCL நிகர லாபம் 19.35% உயர்வு

IHCL நிகர லாபம் 19.35% உயர்வு

வருவாய் வளர்ச்சி இலக்கை 12–14 சதவீதத்திலிருந்து 15–17 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

டாடா குழுமத்தின் இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம், செப்டம்பரில் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் ரூ.379.85 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியுள்ளது. 

முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் பதிவான ரூ.318.26 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 19.35 சதவீத உயர்வாகும். செயல்பாட்டு வருவாய் 21.7 சதவீதம் அதிகரித்து ரூ.2,484.32 கோடியை எட்டியுள்ளது.

தாஜ் உள்ளிட்ட ஹோட்டல்களை நடத்தும் இந்நிறுவனம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தின் வலுவான செயல்பாட்டால் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டுக்கான ஒருங்கிணைந்த வருவாய் வளர்ச்சி இலக்கை 12–14 சதவீதத்திலிருந்து 15–17 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

 
சமூக நிகழ்ச்சிகள், மாநாடுகள் மற்றும் புதிய ஹோட்டல்களின் பங்களிப்பு, வரும் காலாண்டுகளிலும் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது. வலுவான தேவையும் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய அடிப்படையாக உள்ளது.

முந்தைய செய்தி
விஷால் மெகா மார்ட் பங்கு 49 சதவீதம் உயர வாய்ப்பு
அடுத்த செய்தி
10 நிறுவனங்களில் பங்கு இருப்பை உயர்த்திய பரஸ்பர நிதிகள்

தொடர்புடைய செய்திகள்