இந்தியப் பங்குச்சந்தையில் தொடர்ந்து 8 வாரங்களாக சரிவு நீடித்து வரும் நிலையில், இந்த வீழ்ச்சிக்குப் பிறகு மதிப்பு அடிப்படையில் தேர்வு செய்யக்கூடிய 7 முன்னணி நிறுவனப் பங்குகளை ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் பரிந்துரைத்துள்ளது. இவற்றில் அதிகபட்சமாக 44 சதவீதம் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆக்சிஸ் செக்யூரிட்டீஸின் பட்டியலில் பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குக்கு ரூ.1,305 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய நிலவரத்திலிருந்து சுமார் 36 சதவீத உயர்வைக் குறிக்கிறது.
பார்தி ஏர்டெல் பங்குக்கு ரூ.2,530 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 44 சதவீத உயர்வுக்கு வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி பங்குக்கு ரூ.1,800 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 36 சதவீத உயர்வை எதிர்பார்க்கிறது.
உணவு விநியோகம், விரைவு வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் செயல்படும் எடெர்னல் நிறுவனப் பங்குக்கு ரூ.390 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 22 சதவீத உயர்வு வாய்ப்பைக் குறிக்கிறது. வருண் பிவரேஜஸ் பங்குக்கு ரூ.530 இலக்கு; உயர்வு வாய்ப்பு 23 சதவீதம்.
கோட்டக் மகிந்திரா வங்கி பங்குக்கு ரூ.500 இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 20 சதவீத உயர்வை எதிர்பார்க்கிறது. நெஸ்லே இந்தியா பங்குக்கு ரூ.1,765 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இதன் மூலம் 35 சதவீத உயர்வு சாத்தியம் எனக் கூறப்பட்டுள்ளது.
சந்தை தொடர்ந்து சரிவில் உள்ள நிலையில், இந்த இலக்குகள் தரகு நிறுவனத்தின் மதிப்பீடுகள் மட்டுமே. சந்தை நிலவரம், நிறுவனங்களின் நிதிச் செயல்பாடு உள்ளிட்டவற்றைப் பரிசீலித்த பிறகே முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்.