பாரத ஸ்டேட் வங்கி அக்டோபர் 1-ம் தேதி முதல் 4 இலவச பணப்பரிவர்த்தனைகளுக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய விதிமுறையை அமல்படுத்துகிறது.
அதன்படி, Basic Savings Bank Deposit (BSBD) கணக்கு வைத்திருந்தால், மாதத்திற்கு 4 முறை பணம் எடுப்பது தொடர்ந்து இலவசமாக இருக்கும். அதற்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு கூடுதல் பணப்பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் அதனுடன் GST கட்டணமாக வசூலிக்கப்படும். முன்னதாக, SBI ரூ.8 கட்டணமாக வசூலித்து வந்தது.
இதுகுறித்து SBI வெளியிட்டுள்ள குறிப்பில், "ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி கிளை மூலம் தொடங்கப்பட்ட Basic Savings Bank Deposit (BSBD) கணக்குகளுக்கான பணம் எடுப்பதற்கான கட்டணங்களை 2026 அக்டோபர் 1-ம் தேதி முதல் மாற்றியுள்ளது.
இதன்படி, ஒரு மாதத்தில் 4 முறை பணம் எடுப்பது தொடர்ந்து இலவசமாக இருக்கும். 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.15 + GST கட்டணமாக வசூலிக்கப்படும்.
அதேநேரத்தில், அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து இலவசமாக இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.