சென்னை
இந்திய ஐடி நிறுவனங்களின் 2-வது காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில், ஏஐ சேவைகள், புதிய ஒப்பந்தங்கள், வருவாய் வளர்ச்சி மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு முடிவுகள் இந்த மாதத்தில் வெளியாக உள்ளன. நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, புதிய ஒப்பந்தங்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளுக்கான தேவை மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் 2-வது காலாண்டு நிதி முடிவுகள் வரும் 8-ம் தேதி வெளியாக உள்ளன. இதற்கான இயக்குநர் குழு கூட்டமும் அன்றே நடைபெறுகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் காலாண்டில் ஹெச்சிஎல் டெக் நிறுவன வருவாய் ரூ.34,579 கோடியாக இருந்தது. புதிய ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 240.07 கோடி அமெரிக்க டாலராகவும், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளின் வருவாய் 17.01 கோடி அமெரிக்க டாலராகவும் இருந்தது. ஏஐ வருவாய் முந்தைய ஆண்டை விட 62.01 சதவீதம் அதிகரித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் வழக்கமான ஐடி சேவைகளின் வருவாயுடன் ஏஐ, கிளவுட், டிஜிட்டல் சேவைகளின் வளர்ச்சியும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும், புதிய ஒப்பந்தங்கள், லாப விகிதம், பணியாளர் எண்ணிக்கை, அடுத்தகட்ட வருவாய் கணிப்பு ஆகியவை முதலீட்டாளர்களின் கவனத்தில் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.