Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பென்குயின்களைப் பார்க்கப் பறந்த பெண் - வீடு திரும்பியதும் கிடைத்த அதிர்ச்சி!

பென்குயின்களைப் பார்க்கப் பறந்த பெண் - வீடு திரும்பியதும் கிடைத்த அதிர்ச்சி!

அண்டார்டிகா சென்ற சீனப் பெண்ணுக்கு, வீடு திரும்பியதும் எதிர்பாராத செய்தி கிடைத்தது.

பகிரவும் WhatsApp Facebook

புற்றுநோய் கண்டறியப்பட்டதால், வாழ்நாள் கனவை நிறைவேற்ற, சேமிப்பைக் கொட்டி அண்டார்டிகா சென்ற சீனப் பெண்ணுக்கு, வீடு திரும்பியதும் எதிர்பாராத செய்தி கிடைத்தது. அவரது தைராய்டு கட்டி அளவில் குறைந்திருந்தது.

சீனாவின் குன்மிங் நகரைச் சேர்ந்தவர் வாங் யிங் (வயது 67). பள்ளி நிர்வாகப் பணியிலிருந்து ஓய்வுபெறத் தயாரான அவருக்கு, 2013-ம் ஆண்டு தைராய்டு புற்றுநோய் கண்டறியப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், அதற்குத் தயங்கிய வாங், நீண்டகால ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்தார்.


பறவைகளைப் புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள அவருக்கு, அண்டார்டிகாவில் பென்குயின்களைப் படம்பிடிப்பதே கனவு. ஒருமாதப் பயணத்துக்கு 1.5 லட்சம் யுவான் தேவைப்பட்டது. சேமிப்பு போதாததால், அவரது தாயும் பண உதவி செய்தார்.
அண்டார்டிகா பயணமான வாங் யிங், பனிவெளியில் வாங் தேடிய ஒரே காட்சி, குஞ்சுக்கு தாய் பென்குயின் உணவூட்டுவதுதான்.


மைனஸ் 10 டிகிரி குளிர், பலத்த காற்று, கடும் பனிப்பொழிவு என இயற்கை சவால் விடுத்தது. மற்ற சுற்றுலாப் பயணிகள் திரும்பிய பின்னரும், கேமராவுடன் காத்திருந்தார் வாங். இறுதியில், கடலிலிருந்து திரும்பிய தாய் பென்குயின் தனது குஞ்சுக்கு உணவூட்டிய தருணம் அவரது கேமராவில் பதிவானது.
கனவு நிறைவேறிய மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பியவருக்கு, மருத்துவப் பரிசோதனையில் இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. 

முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது கட்டி சிறிதாகியிருந்தது. அறுவை சிகிச்சையைத் தற்காலிகமாக ஒத்திவைக்கலாம் என்றும், தொடர்ந்து கண்காணிப்பு அவசியம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த அனுபவம் வாங் யிங்கின் வாழும் ஆர்வத்தைப் புதுப்பித்தது. அதன் பின்னர், 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணித்துள்ள அவர், புகைப்படக் கருவிகளுக்காக ஓய்வூதியத்தையும் செலவிட்டுள்ளார்.


அடுத்ததாக அமெரிக்கா, பெரு, ஆப்பிரிக்க நாடுகள் அவரது பயணப் பட்டியலில் உள்ளன. பனிக்கண்டத்தில் எடுத்த அந்தப் புகைப்படம், அவரது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தின் அடையாளமாகிவிட்டது.
வாங் யிங்கின் அண்டார்டிகா பயணமே கட்டி குறைந்ததற்குக் காரணம் என செய்தி உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், அந்தப் பயணம் அவருக்கு அளித்த மனநிறைவும், புதிய நம்பிக்கையும், தொடர்ந்து உலகைச் சுற்றிப் பார்க்கும் உற்சாகமாக மாறியுள்ளன. இப்போது அவரது கனவுப் பட்டியல் மேலும் நீள்கிறது.

முந்தைய செய்தி
அரிய மூன்று நட்சத்திர அமைப்பை கண்டறிந்த தொலைநோக்கி
அடுத்த செய்தி
தங்கத்தைக் குவிக்கும் சீனா - பின்னணி என்ன?

தொடர்புடைய செய்திகள்