Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தங்கத்தைக் குவிக்கும் சீனா - பின்னணி என்ன?

தங்கத்தைக் குவிக்கும் சீனா - பின்னணி என்ன?

டாலர் சார்பைக் குறைக்க அதிரடி

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்க டாலர் சார்பைக் குறைக்கும் முயற்சியும், பாதுகாப்பான முதலீட்டுக்கான மக்களின் தேவையும் அதிகரித்துள்ளதால், சீனாவின் தங்க இறக்குமதி சாதனை அளவை எட்டியுள்ளது.

2026-ம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், சீனா 15,880 கோடி டாலர் மதிப்பிலான 1,000 டன்னுக்கும் அதிகமான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது 2025-ம் ஆண்டு முழுவதும் இறக்குமதியான 886 டன் தங்கத்தையும், அதன் மதிப்பான 9,650 கோடி டாலரையும் தாண்டியுள்ளது.
சீன மத்திய வங்கி தொடர்ந்து 23 மாதங்களாகத் தங்கம் வாங்கி வருகிறது. செப்டம்பரில் மட்டும் சுமார் 23 டன் வாங்கியது. அந்நியச் செலாவணி கையிருப்பில் அமெரிக்க டாலர் மற்றும் அரசுக் கடன் பத்திரங்களின் பங்கைக் குறைப்பது இதன் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.


உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்ய மத்திய வங்கியின் சொத்துகள் முடக்கப்பட்டது, வெளிநாடுகளில் கையிருப்பு வைத்திருப்பதன் அபாயத்தை வெளிப்படுத்தியது. இதனால் தங்கத்தின் மீதான சீனாவின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
மறுபுறம், சீனாவின் நீடித்த ரியல் எஸ்டேட் சரிவு, பங்குச்சந்தை வீழ்ச்சி, குறைந்த பத்திர வருவாய் ஆகியவை குடும்பங்களைத் தங்க முதலீட்டுக்குத் திருப்பியுள்ளன.

அமெரிக்கப் பத்திர வருவாய் உயர்ந்த நிலையிலும், சீனாவின் கொள்முதல் உலகத் தங்க விலைக்கு ஆதரவளிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
செப்டம்பரில் தங்க விலை எட்டு சதவீதத்துக்கும் மேல் சரிந்து, அவுன்ஸுக்கு சுமார் 4,176 டாலராக இருந்தது. இருப்பினும், 2027-ம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவில் விலை 4,750 முதல் 5,500 டாலரை எட்டலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.


இந்தியாவில் பண்டிகை காலத் தேவை தங்க விற்பனையை ஊக்குவிக்கலாம். எனினும், உலக விலையின் போக்கு மத்திய வங்கிகளின் கொள்முதல், முதலீட்டு வரத்து, அமெரிக்க வட்டி விகித எதிர்பார்ப்புகளைச் சார்ந்திருக்கும்.

முந்தைய செய்தி
பென்குயின்களைப் பார்க்கப் பறந்த பெண் - வீடு திரும்பியதும் கிடைத்த அதிர்ச்சி!
அடுத்த செய்தி
எண்ணெய் கையிருப்பை அதிகரிக்க ஆசிய நாடுகளுக்கு ஜப்பான் வலியுறுத்தல்

தொடர்புடைய செய்திகள்