சீனாவின் ஃபாஸ்ட் வானொலி தொலைநோக்கி உதவியுடன், புதிரான சமிக்ஞையை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், மூன்று நட்சத்திரங்கள் இணைந்த அரிய அமைப்பைக் கண்டறிந்துள்ளனர்.
பிஎஸ்ஆர் J0435+3233 எனப்படும் இந்த அமைப்பில், துடிப்பு நட்சத்திரம், வெண்குறு நட்சத்திரம், சூரியனைப் போன்ற நட்சத்திரம் இடம்பெற்றுள்ளன. துடிப்பு நட்சத்திரம் வழக்கத்தைவிட 100 மடங்கு வேகமாகச் சுழற்சியில் உள்ளதாகத் தோன்றியது. சுமார் ஐந்தாண்டு காலக் கண்காணிப்பில், மூன்றாவது நட்சத்திரத்தின் ஈர்ப்பே இந்தத் தோற்றத்திற்குக் காரணம் என்பது தெரியவந்தது.
உள் நட்சத்திரங்கள் எட்டு நாட்களுக்கு ஒருமுறையும், வெளிப்புற நட்சத்திரம் 73.5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் சுற்றுகின்றன. இந்தக் கண்டுபிடிப்பு, நட்சத்திரங்களின் பரிணாமத்தையும் ஈர்ப்புவிசைக் கோட்பாடுகளையும் ஆராய உதவும்.
ஆய்வு முடிவுகள் அக்டோபர் 9-ம் தேதி வெளியிடப்பட்டன.
சீன மற்றும் ஐரோப்பிய ஆய்வுக் குழுக்கள் இதனைத் தனித்தனியாக உறுதிப்படுத்தியுள்ளன. எதிர்காலத்தில் இந்த அரிய வெளிப்புற நட்சத்திரமும் வெண்குறு நட்சத்திரமாக மாறலாம் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.