Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பச்சையாக மாறும் அண்டார்டிகா பனி - மர்மம் என்ன?

பச்சையாக மாறும் அண்டார்டிகா பனி - மர்மம் என்ன?

பென்குயின் எச்சத்தால் வளரும் பாசிகள்

பகிரவும் WhatsApp Facebook

எங்கும் வெண்மை நிறத்தில் பனிபடர்ந்த அண்டார்டிகாவில், சில இடங்கள் பச்சை நிறத்தில் காட்சியளிக்கின்றன. இந்த மாற்றத்துக்குப் பென்குயின் பறவைகளின் எச்சமும் ஒரு காரணம் என்பதைப் புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. பாசிகள் வளர உதவும் இந்த எச்சம், பனி விரைவாக உருகுவதற்கும் வழிவகுக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டார்டிகாவின் பனிப் பரப்பில் மிகச் சிறிய பாசிகள் வளர்கின்றன. இவை அதிகமாகப் படர்ந்துள்ள இடங்களில் பனி பச்சையாகவோ, சிவப்பாகவோ தெரிகிறது. இந்த நிற வேறுபாட்டுக்கும், அங்கு வாழும் பென்குயின்களுக்கும் உள்ள தொடர்பை அறிய ஆராய்ச்சியாளர்கள் களத்தில் இறங்கினர்.


மேற்கு அண்டார்டிகா தீபகற்பத்தின் ஒன்பது கடலோரப் பகுதிகளில் இருந்து 111 பனி மாதிரிகளைச் சேகரித்தனர். பென்குயின்கள் வாழும் இடங்களிலும், அவை இல்லாத பகுதிகளிலும் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவற்றில் பாசிகளின் எண்ணிக்கை, நிறம், ஊட்டச்சத்துகள் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன.
இதில், பச்சைப் பனியில் பாஸ்பேட் என்ற ஊட்டச்சத்து அதிகமாக இருப்பது தெரியவந்தது. சிவப்புப் பனியைவிட பத்து மடங்கும், தூய வெண்பனியைவிட சுமார் எழுபது மடங்கும் அதிகமாக பாஸ்பேட் இருந்தது. சத்து அதிகமுள்ள இடங்களில் பாசிகளும் அடர்த்தியாக வளர்ந்திருந்தன.


இதற்குப் பென்குயின்கள் உதவுவது தெரிய வந்துள்ளது. கடலில் இரைதேடும் இந்தப் பறவைகள், உணவின் மூலம் பெறும் சத்துகளை எச்சமாகக் கரையில் வெளியேற்றுகின்றன. பனியில் அவை நடந்து செல்லும்போது எச்சமும் பரவுகிறது. அதிலுள்ள பாஸ்பேட், பாசிகளுக்கு இயற்கை உரமாக அமைகிறது.
போதுமான சத்து கிடைத்தால் பாசிகள் பச்சையாக இருந்து வேகமாக வளர்கின்றன. சத்து குறைந்தாலோ, சூழல் கடுமையானாலோ, தங்களைப் பாதுகாத்துக்கொள்ளச் சிவப்பு நிறமிகளை உருவாக்குகின்றன. அப்போது அவற்றின் வளர்ச்சியும் குறைகிறது.


பனியின் இந்த நிறமாற்றம் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அதன் விளைவு கவலை அளிக்கக்கூடியது. வெண்பனி சூரிய ஒளியின் பெரும்பகுதியைத் திருப்பி அனுப்புகிறது. ஆனால், பச்சைப் பனி அதிக வெப்பத்தை உறிஞ்சுவதால் விரைவாக உருக வாய்ப்புள்ளது.
தூய வெண்பனியுடன் ஒப்பிடும்போது, பச்சைப் பனி சூரிய ஆற்றலை சுமார் 40 சதவீதம் கூடுதலாக உறிஞ்சுகிறது. இந்த விளைவைப் பனி உருகல் கணிப்புகளில் சேர்க்க இன்னும் கூடுதல் ஆய்வுகள் தேவை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


காலநிலை மாற்றத்தால் பென்குயின்கள் இடம்பெயரும்போது, பாசிகள் வளரும் இடங்களும் மாறக்கூடும். இதனால் பனி உருகும் பகுதிகளிலும் மாற்றம் ஏற்படலாம். வெப்பநிலையை மட்டுமே கணக்கிட்டு அண்டார்டிகாவின் எதிர்காலத்தை அறிந்துவிட முடியாது; அங்குள்ள பறவைகள், பாசிகள், ஊட்டச்சத்துகள் ஆகியவற்றையும் ஒன்றாகக் கவனிக்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
அண்டார்டிகாவின் மாற்றத்தைப் புரிந்துகொள்ள, பென்குயினின் சிறிய காலடித் தடத்தைக்கூட அறிவியல் உற்றுநோக்குகிறது.


முந்தைய செய்தி
முத்திரைத்தாள் பதிவில் மாற்றங்கள் செய்ய அரசுக்கு கோரிக்கை
அடுத்த செய்தி
Organic manure made from waste for farmers

தொடர்புடைய செய்திகள்