Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தூத்துக்குடி–கன்னியாகுமரி இடையே நான்கு வழிச்சாலை

தூத்துக்குடி–கன்னியாகுமரி இடையே நான்கு வழிச்சாலை

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே நெல்லை–கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையுடன் இணையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தூத்துக்குடி–திருச்செந்தூர்–கன்னியாகுமரி இடையே 106.9 கி.மீ. நீளத்துக்கு புதிய நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த சாலைத் திட்டத்துக்காக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மொத்தம் 853.09 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியில் தொடங்கும் இந்தச் சாலை, திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், உடன்குடி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று, கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே நெல்லை–கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையுடன் இணையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.


இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 25 கிராமங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் 11 கிராமங்களிலும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்தச் சாலை அமைக்கப்பட்டால் திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் பயணம் எளிதாகும். மேலும், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், உடன்குடி அனல்மின் நிலையம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களுக்கான போக்குவரத்து இணைப்பும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.35.34 கோடியில் அமைக்கப்படும் பசுமை மெத்தனால் எரிபொருள் மையத்தைப் பிரதமர் திறந்து வைத்தார். 750 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்பு மையம், 2.4 கி.மீ. நீளக் குழாய் வழித்தடத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


கப்பல்களில் பயன்படுத்தப்படும் புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றாகப் பசுமை மெத்தனாலை வழங்குவது இதன் நோக்கமாகும். பொறியியல், கொள்முதல், கட்டுமானம் (EPC) முறையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்குப் புனேவைச் சேர்ந்த SOPAN குழுமம் ஒப்பந்ததாரராக நியமிக்கப்பட்டுள்ளது.

 ஐந்து ஆண்டுகள் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. காண்ட்லா–தூத்துக்குடி கடலோரப் பசுமைக் கப்பல் போக்குவரத்துக்கும் இம்மையம் ஆதரவளிக்கும்.


முந்தைய செய்தி
Kirtilals unveils ‘Sindooram’ at Alwarpet showroom
அடுத்த செய்தி
இண்டிகோ விமானத்தில் பவர் பேங்க் தீப்பற்றியதால் பரபரப்பு

தொடர்புடைய செய்திகள்