Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தொடர்ந்து 4 நாட்களாக சரிவில் தங்கம் - பவுனுக்கு ரூ.2,680 குறைந்தது

தொடர்ந்து 4 நாட்களாக சரிவில் தங்கம் - பவுனுக்கு ரூ.2,680 குறைந்தது

வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000 வீழ்ச்சி

பகிரவும் WhatsApp Facebook

கடந்த நான்கு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது, நகை வாங்குவோரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 19-ம் தேதி முதல் நேற்று அக்டோபர் 22 வரையிலான நிலவரப்படி, ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2,680 வரையும், வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000 வரையும் குறைந்துள்ளது.


கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை கணிசமான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து விலை குறைந்து வருகிறது.கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.13,570-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,560-க்கும் விற்பனையானது.


தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்த தங்கம் விலை, நேற்று கிராமுக்கு ரூ.335 குறைந்து ரூ.13,235 ஆகவும், பவுனுக்கு ரூ.2,680 குறைந்து ரூ.1,05,880-க்கும் விற்பனையானது
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையிலும் பெரும் சரிவு காணப்படுகிறது. அக்டோபர் 19 மற்றும் 20-ம் தேதிகளில் ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கு விற்கப்பட்டது.

 அடுத்தடுத்த நாட்களில் இதன் விலை தடாலடியாகக் குறைந்து, நேற்று ஒரு கிராம் ரூ.225 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,25,000-க்கும் விற்பனையானது . நான்கு நாட்களில் ஒரு கிலோ வெள்ளி ரூ.15,000 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து வரும் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு நகை வாங்கக் காத்திருந்த நடுத்தர மக்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் இந்த விலை வீழ்ச்சி ஆறுதலை அளித்துள்ளது.

தேதி           24 காரட் தங்கம்                      22 காரட் தங்கம்
                   1 கிராம்     8 கிராம்                1 கிராம்        8 கிராம்
அக்.22          14,438       115,504                      13,230         105,880
அக்.21          14,607       116,856                      13,390         107,120
அக்.20          14,716       117,728                      13,490         107,920
அக்.19          14,804       118,432                      13,570         108,560



தேதி          1 கிராம் வெள்ளி (ரூ)        வெள்ளி 1 கிலோ (ரூ)
அக்.22               225.00                                       2,25,000.00
அக்.21               230.00                                       2,30,000.00
அக்.20               240.00                                       2,40,000.00
அக்.19               240.00                                       2,40,000.00


முந்தைய செய்தி
இந்தியப் பயணத்தை நிறைவு செய்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
அடுத்த செய்தி
Tiruchi Mayor inspects storm water pumping station

தொடர்புடைய செய்திகள்