Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இண்டிகோ விமானத்தில் பவர் பேங்க் தீப்பற்றியதால் பரபரப்பு

இண்டிகோ விமானத்தில் பவர் பேங்க் தீப்பற்றியதால் பரபரப்பு

ஹைதராபாத்தில் அவசரமாகத் தரையிறக்கம்

பகிரவும் WhatsApp Facebook

டெல்லியில் இருந்து நேற்று சென்னைக்கு வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவரின் பவர் பேங்க் தீப்பற்றியதால், விமானம் ஹைதராபாத்துக்குத் திருப்பிவிடப்பட்டு, அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இண்டிகோ நிறுவனத்தின் 6E 6115 விமானம் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்தபோது, விமானத்தின் மேல்புறப் பொருள் வைக்கும் பகுதியில் இருந்த பயணியின் பவர் பேங்க்கில் இருந்து புகை வெளியேறியது. இதையடுத்து, விமானப் பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர்.


பாதுகாப்பு நடைமுறைகளின்படி விமானம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


பயணிகள் தங்களது பயணத்தைத் தொடர்வதற்காக மாற்று விமானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள நிறுவனம், பயணிகளுக்குத் தேவையான உதவிகளும் தகவல்களும் வழங்கப்படுவதாகக் கூறியுள்ளது.


முந்தைய செய்தி
தூத்துக்குடி–கன்னியாகுமரி இடையே நான்கு வழிச்சாலை
அடுத்த செய்தி
North Korea fires multiple ballistic missiles

தொடர்புடைய செய்திகள்