தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழை சுமார் 48 சதவீதம் (442.8 மி.மீ.) பெய்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளின் தரவைப் பார்க்கும் போது, பெய்த மழையளவில், ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. 2021-ல் தமிழகத்தில், 714.3 மி.மீ. மழை பதிவாகி, இயல்பைவிட 59 சதவீதம் அதிகமாக இருந்தது. 2022-ல் 444.8 மி.மீ. என இயல்பு நிலையிலும், 2024-ல் 589.9 மி.மீ. என்று பதிவாகி 33 சதவீதம் அதிகமாக இருந்தது.2025-ல் மொத்த மழை 428.9 மி.மீ. ஆகக் குறைந்து. இயல்பைவிட 3 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு பருவமழை மொத்த மழையளவு நிலவரம் எதுவும் வெளியாகவில்லை.
இந்த ஆண்டு தமிழகத்தில் 81 நாட்கள் கனமழை பதிவாகியுள்ளது. இதில் 29 நாள் மிக கனமழையும், 7 நாள் அதிக கனமழையும் பதிவாகியுள்ளன.
2025 வடகிழக்கு பருவமழையில் திருநெல்வேலியில் இயல்பைவிட 95 சதவீதம் அதிகமாக மழை பதிவான நிலையில், செங்கல்பட்டில் 35 சதவீதம் பற்றாக்குறையாக இருந்தது.
சென்னையில் 10 சதவீதம் குறைவாக மழை பதிவானது. இதனால், ஒரே பருவமழையாக இருந்தாலும் அதன் தாக்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாறுபடுகிறது.
ஆண்டு வாரியான கணக்கீடு
2005 – 790.0 மி.மீ. → மிக அதிக மழை
2010 – 557.0 மி.மீ. → இயல்பை விட அதிகம்
2015 – 523.0 மி.மீ. → அதிக மழை
2016 – 174.0 மி.மீ. → மிகக் குறைந்த மழை
2023 – 457.8 மி.மீ. → இயல்புக்கு அருகில்
2024 – 589.9 மி.மீ. → இயல்பை விட சுமார் 33% அதிகம்
2025 – 428.9 மி.மீ. → இயல்பை விட 3% குறைவு, இயல்பு மழை