Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கல்யாண் ஜுவல்லர்ஸ் வருவாய் 26%க்கும் மேல் உயர்வு

கல்யாண் ஜுவல்லர்ஸ் வருவாய் 26%க்கும் மேல் உயர்வு

ஒருங்கிணைந்த வருவாயில் 26 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

கல்யாண் ஜுவல்லர்ஸ், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது, ஒருங்கிணைந்த வருவாயில் 26 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இந்திய செயல்பாடுகளின் வருவாய் சுமார் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. வலுவான செயல்பாடுகள் மற்றும் ஒரே கடை விற்பனை வளர்ச்சி இதற்கு காரணமாக அமைந்துள்ளது. அதிக அடிப்படை நிலையையும் கடந்து, ஒரே கடை விற்பனை சுமார் 20 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

சென்னையில் ஆகஸ்ட் மாதம் நிறுவனத்தின் முதல் பிராந்திய பிராண்டான அக்ஷயா தங்க மாளிகை அறிமுகப்படுத்தப்பட்டது. 40 நாட்களுக்கும் மேலான செயல்பாட்டில் வலுவான வருவாய் வளர்ச்சி பதிவாகியுள்ளது. நடப்பு நிதியாண்டில் உரிமையாளர் முறையில் மேலும் 4 ஷோரூம்களைத் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சர்வதேச செயல்பாடுகளின் வருவாய் 18 சதவீதம் வளர்ந்துள்ளது. மத்திய கிழக்கு சந்தையில் 12 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. சர்வதேச சந்தைகள் ஒருங்கிணைந்த வருவாயில் 11 சதவீதம் பங்களித்துள்ளன. கேண்டெரேவின் வருவாய் 64 சதவீதம் உயர்ந்துள்ளது.

காலாண்டில் இந்தியாவில் 12 கல்யாண், 9 கேண்டெரே மற்றும் இங்கிலாந்தில் ஒரு கல்யாண் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. ரூ.86 கோடி மதிப்பிலான ரியல் எஸ்டேட் சொத்து விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.16 கோடி மதிப்பிலான மற்றொரு சொத்தின் விற்பனை நடப்பு காலாண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கோல்ட் மெட்டல் லோன் (ஜிஎம்எல்) அல்லாத கடன் பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் 30 நிலவரப்படி, நிறுவனத்தின் மொத்த ஷோரூம்களின் எண்ணிக்கை 546 ஆக உள்ளது.


முந்தைய செய்தி
வடகிழக்கு பருவ மழை - என்ன நிலவரம்?
அடுத்த செய்தி
Women police undergo karate training

தொடர்புடைய செய்திகள்