Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

5 அடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேர கண்காணிப்பு : சுனில் பார்தி மிட்டல்

5 அடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேர கண்காணிப்பு : சுனில் பார்தி மிட்டல்

இணைப்பு, கிளவுட் மற்றும் தரவு மைய சேவைகளை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழில்நுட்ப கட்டமைப்பையும் ஏர்டெல் உருவாக்கி வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய மொபைல் மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஏர்டெல் அரங்கிற்கு மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வருகை தந்தார். பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல், நிறுவனத்தின் கிளவுட், தரவு மையம் மற்றும் இணையப் பாதுகாப்புத் துறைகளில் மேற்கொண்டு வரும் தொழில்நுட்ப முயற்சிகள் குறித்து அமைச்சரிடம் விளக்கினார்.


ஏர்டெல் கிளவுடின் திறன்கள் குறித்து விளக்கப்பட்டதுடன், இந்திய நிறுவனங்கள் தங்களது முக்கிய தரவுகளை இந்தியாவிலேயே பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், முக்கிய பணிகள் மற்றும் பயன்பாடுகள் தடையின்றி தொடர்ந்து செயல்படுவதற்கும் உதவும் வசதிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இணைப்பு, கிளவுட் மற்றும் தரவு மைய சேவைகளை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழில்நுட்ப கட்டமைப்பையும் ஏர்டெல் உருவாக்கி வருகிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் நவீன தரவு மைய சேவைப் பிரிவான நெக்ஸ்ட்ராவில், தரவு மையங்களின் வடிவமைப்பு முதல் செயல்பாடு வரை சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஏர்டெலின் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஐஎஸ்ஒசி (iSOC) இணையப் பாதுகாப்பு அமைப்பானது ரயில்வே, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஒ) உள்ளிட்ட அமைப்புகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.


 ஐந்து அடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேரமும் இணைய அச்சுறுத்தல்களை கண்காணித்து, அவை முக்கிய அமைப்புகளை பாதிக்கும் முன்பே கண்டறிந்து தடுப்பதாக சுனில் பார்தி மிட்டல் தெரிவித்தார்.

மேலும், ஐஐடி டெல்லி மற்றும் பார்தி ஏர்டெல் அறக்கட்டளையின் கூட்டு முயற்சியில், குவாண்டம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு வலையமைப்புகளை வேகமாகவும், திறமையாகவும், குறைந்த ஆற்றலில் செயல்படுத்துவது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.



முந்தைய செய்தி
பயனாளிகளுக்கு நேரடியாக ரூ.50 லட்சம் கோடி - மோடி தகவல்
அடுத்த செய்தி
California Governor Newsom criticises Trump’s immigration policy

தொடர்புடைய செய்திகள்