Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உருவ கேலி, அநாகரிகமான பேச்சு - ஸ்டாலின் மீது தவெக புகார்

உருவ கேலி, அநாகரிகமான பேச்சு - ஸ்டாலின் மீது தவெக புகார்

தவெக வேட்பாளர் சத்யபாமாவை விமர்சித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதற்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமாவை விமர்சித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதற்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்தில் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 
இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை விமர்சித்து பேசினார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாக ஸ்டாலின் பேசியுள்ளார். பெண்களை தொடர்ந்து ஆபாசமாகப் பேசி வரும் திமுகவிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். திமுகவிற்கு தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கப் போகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இதனிடையே இவ்விஷயத்தில் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல்துறை ஆணையரிடமும் தவெக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் - புகார் எண்கள் அறிவிப்பு
அடுத்த செய்தி
Asian Games star athlete says support key to success

தொடர்புடைய செய்திகள்