தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 11-ம் வகுப்பு அரியர் தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் வெளியிட்டார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு அடுத்தாண்டு மார்ச் 3-ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17-ம் தேதியும் தொடங்குகின்றன. பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் முன்கூட்டியே தயாராகும் வகையில், தேர்வு அட்டவணை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 8 முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளன. எழுத்துத் தேர்வுகள் மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், ஏற்கெனவே தேர்ச்சி பெறாத அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் மட்டும் நடத்தப்படுகின்றன. இவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இத்தேர்வுகளுக்கான முடிவுகள் மே 7-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் மார்ச் 17-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளன. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 19 முதல் 26-ம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பொதுத்தேர்வுகளை மாநிலம் முழுவதும் 15 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். கூடுதல் விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் dge.tn.gov.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை
தேதி கிழமை பாடம்
17.03.2027 புதன் தமிழ்
25.03.2027 வியாழன் ஆங்கிலம்
31.03.2027 புதன் கணிதம்
05.04.2027 திங்கள் அறிவியல்
09.04.2027 வெள்ளி சமூக அறிவியல்
12.04.2027 திங்கள் விருப்ப மொழிப்பாடம் (Optional Language)
12-ம் வகுப்புதேர்வு அட்டவணை
தேதி கிழமை பாடங்கள்
03.03.2027 புதன்கிழமை தமிழ், இதர மொழிப்பாடங்கள்
08.03.2027 திங்கட்கிழமை ஆங்கிலம்
12.03.2027 வெள்ளிக்கிழமை வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
15.03.2027 திங்கட்கிழமை தொடர்பு ஆங்கிலம், அறநெறி, இந்தியப் பண்பாடு, கணினி அறிவியல், கணினிப் பயன்பாடுகள், உயிர்வேதியியல், உயர்நிலைத் தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
19.03.2027 வெள்ளிக்கிழமை உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணுப் பொறியியல், அடிப்படைக் குடிமைப் பொறியியல், அடிப்படை தானியங்கிப் பொறியியல், அடிப்படை இயந்திரப் பொறியியல், ஜவுளித் தொழில்நுட்பம்
23.03.2027 செவ்வாய்க்கிழமை இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்புத் திறன்கள்
29.03.2027 திங்கட்கிழமை கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல், வேளாண் அறிவியல்.
சிறப்பு வகுப்புகளுக்கு தடை
அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றார்.