பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
பெரம்பூர் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, அந்த தொகுதியின் வாக்காளர் தினேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, முதல்வர் விஜய், வாக்காளர் தினேஷ் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, முதல்வர் விஜய் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.