Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தினசரி ரூ.340 கோடி வட்டி செலுத்தும் தமிழக அரசு - அமைச்சர் செங்கோட்டையன்

தினசரி ரூ.340 கோடி வட்டி செலுத்தும்  தமிழக அரசு - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அரசு தினமும் சுமார் ரூ.340 கோடி வட்டி செலுத்துகிறது என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழக அரசு ரூ.13 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. இதையொட்டி தினமும் சுமார் ரூ.340 கோடி வட்டி செலுத்துகிறது என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில், வருவாய்துறை துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்தார். இதன் பிறகு அவர் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்த போது, அந்த சம்பவம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தொலைக்காட்சியில் பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால், நீதிமன்ற விசாரணையில் அவருக்கு தெரிந்து தான் இந்த சம்பவம் நடந்தாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசுவது எந்த வகையில் நியாயம்.

திமுக ஆட்சியிலேயே செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கலாம். நாங்கள் ஆட்சிக்கு வந்து 4 மாதம் தான் ஆகிறது. இந்த 4 மாதத்தில் அனைத்து பிரச்னைகளையும் சரி செய்து விட முடியாது. தமிழகம் ரூ.13 லட்சம் கோடி கடனில் உள்ளது. தினமும் சுமார் ரூ.340 கோடி வட்டியாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
இத்தகைய நிதிச்சுமைக்கு மத்தியிலும் மக்களின் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். தவெகவில் இணையும் மாற்றுக் கட்சியினருக்கு விரைவில் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படும் இவ்வாறு அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் கூறினார்.

விலைவாசி உயர்ந்து வருவது குறித்த கேள்விக்கு, “எந்த மாநிலத்தில் விலைவாசி குறைவாக இருக்கிறதோ சொல்லுங்கள் அங்கு சென்று கேட்டு வருகிறேன்”. திமுக ஆட்சியிலும் வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்தது. அப்போது இதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என்றார்.
முந்தைய செய்தி
Healthcare sector may offset cancer drug price cap with cost cuts, hikes
அடுத்த செய்தி
நவீனமாகும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்

தொடர்புடைய செய்திகள்