Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.25 லட்சம் காப்பீட்டுத் திட்டம் - ஜனவரி முதல் அமல்

ரூ.25 லட்சம் காப்பீட்டுத் திட்டம் - ஜனவரி முதல் அமல்

அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் தகவல்

பகிரவும் WhatsApp Facebook

ரூ.25 லட்சமாக வரம்பு உயர்த்தப்பட்ட முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாக அமலுக்கு வரும் என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் தற்போதைய ஒப்பந்தக் காலம் வரும் ஜனவரியுடன் முடிவடைகிறது. அடுத்ததாக கோரப்பட உள்ள புதிய ஒப்பந்தத்தில் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும். 


மேலும், இத்திட்டத்தின்கீழ் கூடுதலாக இணைக்கப்பட வேண்டிய நோய்கள் மற்றும் அதற்கான கட்டணங்களை மறுஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் விரிவான திட்டம் ஜனவரியில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.


 'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48' திட்டத்தின் கீழ் விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்திற்கான அவசர சிகிச்சைச் செலவுகளை அரசே ஏற்று வருவதால், பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள எந்தவொரு மருத்துவமனையிலும் உடனடியாகச் சிகிச்சைப் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
 

முந்தைய செய்தி
Residents prevent removal of silt from lake
அடுத்த செய்தி
220 relief centres kept ready in Chennai

தொடர்புடைய செய்திகள்