Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நல்லெண்ணெய் விலை 12% உயர்வு - ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?

நல்லெண்ணெய் விலை 12% உயர்வு - ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?

நல்லெண்ணெய் விலை கடந்த சில வாரங்களில் சுமார் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் நல்லெண்ணெய் விலை கடந்த சில வாரங்களில் சுமார் 12 சதவீதம் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.365-லிருந்து ரூ.410-ஆக அதிகரித்துள்ளது. எள் வரத்து குறைந்துள்ளதுடன், வெளிமாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு வரத்து இல்லாததும் விலை உயர்வுக்கு காரணம் என வணிகர்கள் தெரிவித்தனர்.


செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பிரபல நிறுவனங்களின் நல்லெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.365-லிருந்து ரூ.410 வரை உயர்ந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் லிட்டருக்கு ரூ.45 அல்லது சுமார் 12.3 சதவீதம் விலை அதிகரித்துள்ளது. ஆன்லைன் சில்லறை விற்பனையிலும் லிட்டர் நல்லெண்ணெய் ரூ.410-க்கு விற்பனை செய்யப்படுவது பதிவாகியுள்ளது.

இதுகுறித்து எண்ணெய் ஆலை உரிமையாளர் சூரம்பட்டியைச் சேர்ந்த பாலு கூறுகையில், மூலப்பொருளான எள் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் எள் அளவும் போதுமானதாக இல்லாததால், நல்லெண்ணெய் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் சில்லறை விலையிலும் எதிரொலித்துள்ளது என்றார்.

இந்தியாவின் எள் வர்த்தகத்திலும் இறக்குமதி-ஏற்றுமதி அளவில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுகிறது. 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 20,728 டன் எள் விதைகள் ரூ.189 கோடி மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதே காலத்தில் 61,248 டன் எள் விதைகள் ரூ.945 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நல்லெண்ணெய் பாரம்பரிய உணவுப் பொருள்கள், ஊறுகாய் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படுவதால், இந்த விலை உயர்வு சிறு உணவு உற்பத்தியாளர்களின் செலவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என திண்டலைச் சேர்ந்த வணிகர் சண்முகம் தெரிவித்தார்.

பண்டிகைக் காலத் தேவை அதிகரித்து வரும் நிலையில், புதிய எள் வரத்து கணிசமாக அதிகரிக்காவிட்டால் நல்லெண்ணெய் விலை குறுகிய காலத்தில் தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
முந்தைய செய்தி
பூர்வி ஜெம்ஸை ரூ.9 கோடிக்கு வாங்கியது ஸ்கை கோல்டு
அடுத்த செய்தி
சீமைக்கருவேல மரங்களுக்காக போர்க்கொடி - நீதிமன்ற உத்தரவால் ஸ்தம்பிக்கும் தொழிலார்கள்! என்ன நடந்தது?

தொடர்புடைய செய்திகள்