Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பூர்வி ஜெம்ஸை ரூ.9 கோடிக்கு வாங்கியது ஸ்கை கோல்டு

பூர்வி ஜெம்ஸை ரூ.9 கோடிக்கு வாங்கியது ஸ்கை கோல்டு

ஸ்கை கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், பூர்வி ஜெம்ஸ் அண்ட் ஜுவல்லரி நிறுவனத்தை ரூ.9 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நகை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனமான ஸ்கை கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், பூர்வி ஜெம்ஸ் அண்ட் ஜுவல்லரி நிறுவனத்தை ரூ.9 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளதாக நேற்று தெரிவித்தது.

அக்டோபர் 7-ஆம் தேதி கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவடைந்தது. தொழில் தொடர்ச்சியை உறுதிசெய்யவும், ஒருங்கிணைப்புக்கு உதவவும் பூர்வி ஜெம்ஸின் தற்போதைய நிர்வாகமே தொடர்ந்து அதன் செயல்பாடுகளை கவனிக்கும் என ஸ்கை கோல்டு தெரிவித்துள்ளது.


இந்த கையகப்படுத்தல் ஏற்றுமதியை அதிகரிப்பதுடன், அதிக லாபம் தரும் கற்கள் பதித்த நகைகளுக்கான வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்திசெய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இலகுரக நகை தயாரிப்புத் திறன், வாடிக்கையாளர் தளம், திறமையான பணியாளர்கள் ஆகியவற்றை பூர்வி ஜெம்ஸ் கொண்டுள்ளது. இது நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சியை வலுப்படுத்தும் என நிர்வாக இயக்குநர் மங்கேஷ் சவுகான் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
போரால் இந்தியாவுக்கு பாதிப்பு - பாமாயிலுக்கு மாறத் தொடங்கும் இறக்குமதியாளர்கள்!
அடுத்த செய்தி
நல்லெண்ணெய் விலை 12% உயர்வு - ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?

தொடர்புடைய செய்திகள்