நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டையில் ஞாயிறுதோறும் நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது.
இந்த வாரம் கூடிய சந்தையில் பரமத்தி, வேலூர், மோகனூர், நாமக்கல், திருச்செங்கோடு, கந்தம்பாளையம் பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் நாட்டுக்கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். கடந்த வாரம் நாட்டுக்கோழி கிலோ ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த வாரம் கிலோ ரூ.200 அதிகரித்து ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராஸ் நாட்டுக்கோழி ரூ.250 இருந்து ரூ.350 ஆக உயர்ந்தது. கடந்த சில வாரங்களாக நாட்டுக்கோழி விலை சரிந்து வந்த நிலையில் தற்போது விலை அதிகரித்துள்ளது.