மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் எம்எல்ஏக்களாக பதவி ஏற்று கொண்டனர்.
சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இதனால், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.
இத்தேர்தலில், தவெக சார்பில் போட்டியிட்டு இருவரும் வெற்றி பெற்றனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முன்னிலையில், மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் எம்எல்ஏக்களாக நேற்று காலை பதவியேற்றனர்.
இதன் மூலம் தவெக எம்எல்ஏக்களின் பலம் 109 ஆனது. பதவியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், வெங்கட ரமணன், ராஜ்மோகன் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.