Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கடனுக்கு ஏலம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பால் ரூ.93,241 கோடிக்கு வங்கிகள் விண்ணப்பம்

கடனுக்கு ஏலம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பால் ரூ.93,241 கோடிக்கு வங்கிகள் விண்ணப்பம்

அறிவிக்கப்பட்ட தொகையை விட ரூ.43,241 கோடி அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

ரிசர்வ் வங்கி நடத்திய ரூ.50,000 கோடி மதிப்பிலான ஒரு நாள் கடன் வழங்கும் ஏலத்தில், வங்கிகள் ரூ.93,241 கோடிக்கு விண்ணப்பித்துள்ளன. இது அறிவிக்கப்பட்ட தொகையை விட ஏறத்தாழ இருமடங்காகும்.


வங்கிகளின் குறுகிய கால நிதித் தேவையை நிறைவு செய்ய இந்த மாறுபடும் வட்டி விகித ரெப்போ ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.50,007 கோடி மதிப்பிலான விண்ணப்பங்களை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டது. ஏலத்தில் ஏற்கப்பட்ட குறைந்தபட்ச வட்டி விகிதமும், சராசரி வட்டி விகிதமும் 5.52 சதவீதமாக இருந்தன.

அறிவிக்கப்பட்ட தொகையை விட ரூ.43,241 கோடி அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதேநேரத்தில், ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகை, அறிவிக்கப்பட்ட அளவைவிட ரூ.7 கோடி கூடுதலாகும். மொத்த விண்ணப்பங்களில் ஏற்கப்பட்ட தொகை பாதிக்கும் சற்று அதிகமாக இருந்தது.

இதனிடையே, அக்டோபர் 20 நிலவரப்படி வங்கி அமைப்பில் உபரி பணப்புழக்கம் ரூ.48,303.95 கோடியாக இருந்ததாக ரிசர்வ் வங்கித் தரவுகள் தெரிவிக்கின்றன. பணப்புழக்கத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளாலும், மாதாந்திர ஜிஎஸ்டி செலுத்த வங்கிகளிலிருந்து பணம் வெளியேறியதாலும் இந்த உபரி கணிசமாக குறைந்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் பணப்புழக்கம் மற்றும் அந்நியச் செலாவணி தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தது. வங்கிகள் தினமும் பராமரிக்க வேண்டிய ரொக்க கையிருப்புக்கான நிபந்தனையை
அ திகரித்ததும், திறந்த சந்தையில் அரசுப் பத்திரங்களை விற்பனை செய்வதும் இதில் அடங்கும்.

ரொக்கக் கையிருப்பு விகித்தில் வங்கிகள் தினமும் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்சத் தொகையின் அளவு 90 சதவீதத்திலிருந்து 99 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால், நிர்ணயிக்கப்பட்ட கையிருப்பில் அதிகப் பகுதியை வங்கிகள் தினந்தோறும் பராமரிக்க வேண்டும்.
வெளிநாடுவாழ் இந்தியர்களின் அந்நிய நாணய வைப்புத்தொகைகள் அதிகளவில் வந்ததால் வங்கி அமைப்பில் உபரி நிதி பெருகியது. அந்த உபரியைக் குறைப்பதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும்.

வங்கிகளிடம் உள்ள உபரி நிதி படிப்படியாகக் குறைந்து, சிறிய பற்றாக்குறை நிலை உருவாகும்போது, ரிசர்வ் வங்கியின் அண்மைய வட்டி உயர்வின் தாக்கம் வங்கி வட்டி விகிதங்களில் பிரதிபலிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி அண்மையில் கொள்கை வட்டியை 25 அடிப்படைப் புள்ளிகள், அதாவது 0.25 சதவீதப் புள்ளி உயர்த்தியது. இந்த உயர்வுக்கு ஏற்ப வங்கிகளின் வைப்புத்தொகை மற்றும் கடன் வட்டி விகிதங்கள் மாறுவதற்கு, பணப்புழக்கம் குறைவது துணையாக இருக்கும்.
முந்தைய செய்தி
Steps taken to expedite distribution of 20 lakh pattas: Minister Sengottaiyan
அடுத்த செய்தி
டார்க் வெப்பில் கசிந்த எஸ்பிஐ வாடிக்கையாளர் தகவல்கள்?

தொடர்புடைய செய்திகள்