Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரயில்வே பணி நியமனம் 2026: 1,688 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

ரயில்வே பணி நியமனம் 2026: 1,688 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தகுதி உள்ளவர்கள் 15-11-2026 தேதிக்குள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

பகிரவும் WhatsApp Facebook

நாடு முழுவதும் ரயில்வேயில் பயணச்சீட்டு வழங்குநர், தட்டச்சர் உள்ளிட்ட 1688 கிளார்க் பணியிடங்களுக்கு பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க ரயில்வே தேர்வு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

வழக்கமாக தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு சென்னை, திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியம்(ஆர்ஆர்பி) தேர்வு செய்யும். இப்போது டெல்லியில் உள்ள ரயில்வே தேர்வு வாரியமே எல்லா மண்டலங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து வருகிறது.

இந்நிலையில் பயணச்சீட்டு வழங்குநர்-700, கணக்கர்/தட்டச்சர்-200, இளநிலை தட்டச்சர்-600, டிரெயின் அமைச்சு பணியாளர்-188 என மொத்தம் 1688 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மத்திய ஆர்ஆர்பி அழைப்பு விடுத்துள்ளது. இவற்றில் சென்னை ஆர்ஆர்பி மண்டலத்தில் 168, திருவனந்தபுரம் ஆர்ஆர்பி மண்டலத்தில் 75 பணியிடங்களும் உள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரப்பு 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். ஈடபிள்யூஎஸ், ஓபிசி, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் உண்டு. தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். தகுதி உள்ளவர்கள் 15-11-2026 தேதிக்குள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை, இணைப்புகள், கட்டணத் தொகை, பதவி வாரியாக கல்வித் தகுதிகள் உட்பட மேலும் விவரங்கள் முழுமையாக அறிய https://rrb.indianrailways.gov.in என்ற தேர்வு வாரிய இணைய தளத்தை பார்க்கவும்.


முந்தைய செய்தி
சிலர் பணம் பெறுவது உண்மைதான்; எங்கு தவறு நடந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் வினோத் தகவல்
அடுத்த செய்தி
காவல் நிலையங்களின் அன்றாட செலவுகளுக்கு ரூ. 71 கோடி ஒதுக்கீடு

தொடர்புடைய செய்திகள்