Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கோயில் பணியாளர்கள் திருமணக் கடன் ரூ.2 லட்சமாக உயர்வு

கோயில் பணியாளர்கள் திருமணக் கடன் ரூ.2 லட்சமாக உயர்வு

முதுநிலை அல்லாத திருக்கோயில்களில் பணிபுரிபவர்களுக்கு ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் திருமணக் கடன் தொகையை, முதுநிலைத் திருக்கோயில்களில் பணிபுரிபவர்களுக்கு ரூ.2 லட்சமாகவும், முதுநிலை அல்லாத திருக்கோயில்களில் பணிபுரிபவர்களுக்கு ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2026–27ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் திருமணக் கடன் தொகை உயர்த்தப்படும் என அறிவிப்பு எண் 81-ன் கீழ் அறிவிக்கப்பட்டது. 


இதனைச் செயல்படுத்தும் வகையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளின் திருமணத்திற்காக, ஆண் பணியாளர்களுக்கு ரூ.6,000-ம், பெண் பணியாளர்களுக்கு ரூ.10,000-ம் திருமணக் கடனாக வழங்கப்பட்டு வந்தது. 

தற்போது இந்தத் தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட திருமணக் கடன் தொகையை, அரசு ஊழியர்களுக்கான விதிகளின்படி 36 மாதத் தவணைகளில் பணியாளர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து திரும்பச் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முந்தைய செய்தி
ஆயுத பூஜை - பொரி மூட்டைக்கு ரூ.50 உயர்வு
அடுத்த செய்தி
Bank profits may rise 25% in Q2FY27, margins to recover gradually: Report

தொடர்புடைய செய்திகள்