Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மதுரை-சென்னை விமான கட்டணம் 2 மடங்கு உயர்வு

மதுரை-சென்னை விமான கட்டணம் 2 மடங்கு உயர்வு

பலரும் ரயில், பேருந்து ஆகியவற்றில் முன்பதிவு செய்து சென்னைக்கு புறப்பட்டனர்.

பகிரவும் WhatsApp Facebook

தொடர் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் பலரும் ரயில், பேருந்து ஆகியவற்றில் முன்பதிவு செய்து சென்னைக்கு புறப்பட்டனர். பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து மதுரை-சென்னை இடையேயான விமான கட்டணங்களும் இரு மடங்கு உயர்ந்தன.


மதுரையில் இருந்து சென்னை வர இண்டிகோ விமானத்தில் எக்னாமி வகுப்புக்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.11,247 நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மதுரையில் இருந்து சென்னை வர ஒன்றை மணி நேரம் தான் பயண நேரம். அதே இன்று புதன்கிழமை பயணிப்பதாக இருந்தால் ரூ.5,524 தான் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னை வர நேற்று ஒருவருக்கு ரூ.17,639 வரை இண்டிகோவில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. வழக்கமான நாட்களில் இந்த கட்டணம் ரூ.7,477 தான்.
கூடவே கோவையில் இருந்து சென்னைக்கு வர நேற்று இண்டிகோ விமான கட்டணம் ரூ.12,093 ஆக இருந்தது. 


இந்தக் கட்டணம் மற்ற நாட்களில் ரூ.5,644 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதே நிலைமைதான் பக்கத்து மாநிலங்களில் உள்ள பெங்களூர், திருவனந்தபுரம், விஜயவாடா, ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னைக்கு புறப்பட்டவர்களுக்கும்.


முந்தைய செய்தி
1 பவுன் தங்கம் ரூ.2 லட்சத்தைத் தொடும் - இடியாய் இறங்கிய தகவல்
அடுத்த செய்தி
India Inc optimistic after Rubio's remarks on India-US trade

தொடர்புடைய செய்திகள்