Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

2030-க்குள் ஹெச்ஐவி தொற்று இல்லா தமிழகத்தை உருவாக்க இலக்கு - அமைச்சர் அருண்ராஜ்

2030-க்குள் ஹெச்ஐவி தொற்று இல்லா தமிழகத்தை உருவாக்க இலக்கு - அமைச்சர் அருண்ராஜ்

ஹெச்ஐவி பாதிப்பு விகிதம், தற்போது பாதியாகக் குறைக்கப்பட்டு, 0.19 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

2030-க்குள் ஹெச்ஐவி தொற்று இல்லா தமிழகத்தை உருக்குவதே இலக்கு என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் ஹெச்ஐவி மற்றும் பால்வினை நோய் தொற்று விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.


இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 2010-ல் 0.40 சதவீதமாக இருந்த ஹெச்ஐவி பாதிப்பு விகிதம், தற்போது பாதியாகக் குறைக்கப்பட்டு, 0.19 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விழிப்புணர்வை மேலும் தீவிரப்படுத்தி 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஹெச்ஐவி தொற்றில்லா மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கம்.


தமிழகத்தில் ஹெச்ஐவி பாதிப்புடன் சுமார் 1,63,388 பேர் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ள சூழலில், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கும் ஏஆர்டி மையங்கள் வாயிலாக தற்போது 1,63,151 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


வளரிளம் பெண்கள், மாணவிகளின் ரத்தசோகை குறைபாட்டைக் களைய சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் போராட்டம் குறித்து , துறை சார்ந்த அதிகாரிகளுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

 முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது தேவையற்றது. எனினும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
 

முந்தைய செய்தி
வேகமாக வளரும் நகரங்கள் பட்டியலில் திருச்சி
அடுத்த செய்தி
Building Brands in the Age of Delegated Choices

தொடர்புடைய செய்திகள்