Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வேகமாக வளரும் நகரங்கள் பட்டியலில் திருச்சி

வேகமாக வளரும் நகரங்கள் பட்டியலில் திருச்சி

வேகமாகப் பொருளாதார வளர்ச்சி அடையும் நகரங்களின் பட்டியலில் திருச்சியும் இடம் பெற்றுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

உலக அளவில் 2019 முதல் 2035 வரையிலான காலகட்டத்தில் வேகமாகப் பொருளாதார வளர்ச்சி அடையும் நகரங்களின் பட்டியலில் திருச்சியும் இடம் பெற்றுள்ளது.


ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் அமைப்பின் கணிப்பின்படி, திருச்சி நகரம் ஆண்டுக்கு சராசரியாக 8.3 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியைப் பதிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் வேகமாக வளரும் 10 நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக, திருப்பூர், திருச்சி, சென்னை ஆகிய நகரங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த 17 நகரங்கள், உலகின் வேகமாக வளரும் 20 நகரங்களில் இடம்பெறுவதாகக் கூறப்படும் இந்தக் கணிப்பு, நாட்டின் நகர்ப்புறப் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

திருச்சி ஆண்டுக்கு 8.3 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி கணிப்பு, திருச்சியின் தொழில், வர்த்தகம், சேவைத்துறை மற்றும் நகர்ப்புறப் பொருளாதாரத்தின் எதிர்கால வாய்ப்புகள் குறித்து கவனம் ஈர்க்கிறது.

திருச்சியில் பொன்மலை ரயில்வே பணிமனை, பெல் நிறுவனம், கனரகப் பொறியியல் சார்ந்த தொழில்கள், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக உள்ளன. மேலும், திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் வாயிலாக வெளிநாட்டு இணைப்புகள், பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து மேம்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டை உள்ளிட்ட தொழில் வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாக முன்னேறும்பட்சத்தில், முதலீடுகள், வேலைவாய்ப்புகள் மற்றும் அதைச் சார்ந்த சேவைத் துறைகளின் வளர்ச்சிக்கு வாய்ப்புகள் உருவாகலாம்.

ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் கணிப்பாகக் குறிப்பிடப்படும் பட்டியலில், குஜராத்தின் சூரத் நகரம் ஆண்டுக்கு 9.2 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்திலும், ஆக்ரா 8.6 சதவீதத்துடனும், பெங்களூரு 8.5 சதவீதத்துடனும் இடம்பெற்றுள்ளன.

நாக்பூர் 8.4 சதவீதம், திருப்பூர், ராஜ்கோட், திருச்சி ஆகிய நகரங்கள் தலா 8.3 சதவீதம், ஹைதராபாத், சென்னை, விஜயவாடா ஆகிய நகரங்கள் சுமார் 8.2 சதவீத வளர்ச்சியுடன் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி
சுனில் பார்தி மிட்டலுக்கு பிரான்ஸ் நாட்டின் விருது
அடுத்த செய்தி
2030-க்குள் ஹெச்ஐவி தொற்று இல்லா தமிழகத்தை உருவாக்க இலக்கு - அமைச்சர் அருண்ராஜ்

தொடர்புடைய செய்திகள்