மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் நிலை ஆகியவற்றால், தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (அக். 8) ஒரு சவரன் ரூ. 1,09,680 -க்கும், ஒரு கிராம் ரூ. 13,710 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ ரூ.2 .45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை மாற்றமின்றி சவரன் ரூ. 1,09,400-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 120 குறைந்த நிலையில் புதன்கிழமை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்தது.