சென்னை மாதவரத்தில் தினசரி 7 லட்சம் லிட்டர் பாலை நிர்வகிக்க ரூ.152.26 கோடியில் ஆவின் பால் பண்ணை அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை முதல்வர் விஜய் ஆய்வு செய்தார்.
மாதவரம் பால் பண்ணை 1963-ஆம் ஆண்டு நாளொன்றுக்கு 50,000 லிட்டர் பால் பதப்படுத்தும் திறனுடன் தொடங்கப்பட்டது. தற்போது செயல்படும் மாதவரம் பால் பண்ணையில் நாளொன்றுக்கு சுமார் 4.50 லட்சம் லிட்டர் பால் கையாளப்படுகிறது. வடசென்னை பகுதிகளில் சுமார் 120 வாகனங்களில் பால் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், தினசரி 7 லட்சம் லிட்டர் பாலை நிர்வகிக்க ரூ.152.26 கோடியில் ஆவின் பால் பண்ணை அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை முதல்வர் விஜய் ஆய்வு செய்தார்.
இது தானியங்கி தொழில்நுட்பத்தில் நவீன பால் பண்ணையாக அமைக்கப்படுகிறது. இந்த கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார். மேலும், பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, ரூ.2.23 கோடியில் அதிநவீன கருவிகளுடன் கட்டப்பட்ட ஆவின் மாநில மத்திய ஆய்வ துணைக் கட்டிடத்தையும் முதல்வர் நேற்று திறந்து வைத்தார். இந்த ஆய்வகத்தில் குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட பல்வேறு தரப் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.
இதனால், ஆவின் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களுக்குத் தேவையான தரப் பரிசோதனைகளை விரைவாகவும் துல்லியமாகவும் செய்ய முடியும்.
புதிய பால் பண்ணை செயல்பாட்டுக்கு வரும்போது, மாதவரத்தில் பால் கையாளும் திறன் 7 லட்சம் லிட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.