Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பாங்க் ஆஃப் அமெரிக்காவுக்கு ரூ.10,700 கோடி அபராதம்

பாங்க் ஆஃப் அமெரிக்காவுக்கு ரூ.10,700 கோடி அபராதம்

பாங்க் ஆஃப் அமெரிக்காவுக்கு சுமார் 1.21 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ரூ.42,000 கோடிக்கும் அதிகமான சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனைகளை உரிய நேரத்தில் கண்காணித்து, அதிகாரிகளுக்குத் தெரிவிக்கத் தவறியதாக அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் அமெரிக்காவுக்கு சுமார் 1.21 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பண மோசடி தடுப்பு விதிகள் மற்றும் பொருளாதாரத் தடைகள் தொடர்பான விதிகளை மீறியதாக அமெரிக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அமெரிக்க நிதித்துறையின் நிதிக் குற்றங்கள் அமலாக்கப் பிரிவு, பாங்க் ஆஃப் அமெரிக்காவுக்கு 1.2 பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. அமெரிக்க நாணயக் கட்டுப்பாட்டு அலுவலகம் தனியாக 75 கோடி டாலர் அபராதம் விதித்துள்ளது. இந்தத் தொகை ஏற்கெனவே விதிக்கப்பட்ட அபராதத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதுதவிர, பொருளாதாரத் தடைகள் தொடர்பான விதிமீறல்களுக்காக 1.16 கோடி டாலர் செலுத்தவும் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. மொத்த அபராதம் சுமார் 1.21 பில்லியன் டாலராகும். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.10,700 கோடி.


அமெரிக்க நிதித்துறை வெளியிட்ட தகவலின்படி, 500 கோடி டாலருக்கும் அதிகமான சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் உரிய நேரத்தில் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இதில் 100 கோடி டாலருக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் தேசியப் பாதுகாப்பு தொடர்பான அபாயங்களைக் கொண்டிருந்தன. சீனாவுடன் தொடர்புடைய பணமோசடி வலையமைப்புகள், மோசடி மற்றும் அமெரிக்காவின் தென்மேற்கு எல்லைப் பகுதியில் நடைபெற்றிருக்கக்கூடிய வர்த்தகப் பணமோசடி ஆகியவை இதில் அடங்கும்.


வங்கியின் கண்காணிப்பு அமைப்புகள் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகளைக் கண்டறிவதில் குறைபாடுகளுடன் செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல் துறை அல்லது பிற வங்கிகளிடமிருந்து தகவல் வந்த பிறகே பல பரிவர்த்தனைகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகளைச் சரிபார்ப்பதிலும், வெளிநாட்டு வங்கிகளுக்கான கணக்குகளை ஆய்வு செய்வதிலும் குறைபாடுகள் இருந்துள்ளன.


குறிப்பாக, 2024-ம் ஆண்டிலேயே குறைபாடுகளைச் சரிசெய்யுமாறு வங்கிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இருப்பினும், அதற்குப் பிறகும் பல குறைபாடுகள் தொடர்ந்ததாக அமெரிக்க நாணயக் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. வங்கியின் கண்காணிப்பு அமைப்புகள் லட்சக்கணக்கான கோடி டாலர் மதிப்பிலான பரிவர்த்தனைகளை முறையாகக் கண்காணிக்கத் தவறியதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இதையடுத்து, கடந்த காலப் பரிவர்த்தனைகளைத் தனியார் சுயாதீன நிறுவனம் மூலம் மறுஆய்வு செய்து, விடுபட்ட சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அபராதத்தால் நடப்பு காலாண்டில் வங்கியின் நிகர லாபம் பாதிக்கப்படும். மூன்றாம் காலாண்டு முடிவுகளில் சுமார் 120 கோடி டாலரைச் செலவாகக் கணக்கிட வேண்டியிருக்கும் என்றும், இதனால் ஒரு பங்குக்கான லாபம் சுமார் 17 சென்ட் குறையலாம் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.


இதுகுறித்து பாங்க் ஆஃப் அமெரிக்கா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிதிக் குற்றங்களைத் தடுப்பதற்காக தொழில்நுட்ப வசதிகளிலும், பணியாளர்களிலும் பெருமளவு முதலீடு செய்துள்ளதாகவும், அதிகாரிகள் சுட்டிக்காட்டிய குறைபாடுகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
டிரான்ஸ்ரெயில் லைட்டிங்குக்கு புதிய ஒப்பந்தங்கள்: பங்குகள் வர்த்தகத்தில் ஏற்றம்
அடுத்த செய்தி
விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு

தொடர்புடைய செய்திகள்