Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தேங்காய் எண்ணெய் விலை குறைப்பு - லிட்டருக்கு இவ்வளவா?

தேங்காய் எண்ணெய் விலை குறைப்பு - லிட்டருக்கு இவ்வளவா?

தேங்காய் எண்ணெய் விலை லிட்டர் ரூ.390-லிருந்து ரூ.265 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், ‘பசுமை’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெய் விலை லிட்டர் ரூ.390-லிருந்து ரூ.265 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழகத்தின் முக்கிய வேளாண் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் ஒன்றாகத் திகழும் இச்சங்கத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.400 கோடி மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது. இச்சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறுகிறது. அக்டோபர் 14-ம் தேதி நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 6,399 மூட்டைகளில் கொண்டு வரப்பட்டிருந்த 2,89,000 கிலோ கொப்பரை விற்பனை செய்யப்பட்டது. அதன் மூலம் ரூ.4.24 கோடி வர்த்தகம் நடைபெற்றது.

விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ கொப்பரைக்கு 30 பைசாவும், வியாபாரிகளிடமிருந்து 20 பைசாவும் கமிஷனாக வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கும் வருவாய் சங்கத்தின் நிர்வாகச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு சங்கத்துக்கு ரூ.1.04 கோடி லாபம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சங்கத்தில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கான ஆலை உள்ளது. இந்த ஆலையில் மாதத்துக்கு 10 டன் எண்ணெய் உற்பத்தி செய்யும் திறன் இருந்தாலும், தற்போது மாதத்துக்கு சுமார் இரண்டு டன் எண்ணெய் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது தேங்காய் எண்ணெய் லிட்டர் ரூ.265-க்கும், கடலை எண்ணெய் லிட்டர் ரூ.290-க்கும், நல்லெண்ணெய் லிட்டர் ரூ.370-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முந்தைய செய்தி
Over 4000 baby gold rings distributed in Salem
அடுத்த செய்தி
Over 30 arrested at Dindigul protest

தொடர்புடைய செய்திகள்