ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் செர்ரி பூக்கள் தற்போது, கொடைக்கானலில் மலர துவங்கியுள்ளன.
கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. இங்கு நிலவும் பருவ நிலை மாற்றத்தால், இயற்கையில் மாற்றம் ஏற்பட்டு கொடைக்கானை மேலும் அழகு படுத்துகின்றன. இதில், ஆண்டுக்கு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பூத்துக் குலுங்கும் கானக செர்ரி மலர்கள் முதன்மை இடத்தினை பிடிக்கின்றன.
மலைப் பகுதிகளில் அதிகமான அளவில் காணப்படும் இந்த மரங்களில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இலைகள் உதிர்ந்து செப்டம்பர் இறுதி மற்றும் அக்டோபர் மாதத்திலும் ரோஸ் நிறத்தில் பூக்கும். தற்போது கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் பூத்து குலுங்குகின்றன. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.