Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

என்விடியாவுக்குப் போட்டியாக அமேசானின் புதிய மென்பொருள்

என்விடியாவுக்குப் போட்டியாக அமேசானின் புதிய மென்பொருள்

மற்றவர்களும் இதனை மேம்படுத்தும் வகையில் திறந்த மூல மென்பொருளாகக் கிடைக்கும்.

பகிரவும் WhatsApp Facebook

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறையில் பயன்படுத்தப்படும் பைடார்ச் நிரல்களை, மாற்றி எழுதாமல் தனது டிரெய்னியம் ‘சிப்’களில் இயக்க உதவும் புதிய மென்பொருளை அமேசான் அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம் ஏஐ சில்லுச் சந்தையில் முன்னணியில் உள்ள என்விடியாவுக்குப் போட்டியை அதிகரிக்க நிறுவனம் முயல்கிறது.


‘டார்ச் நியூரான்’ என்ற இந்த மென்பொருளில், ஒரே ஒரு அமைப்பை மாற்றினால் போதும். ஏற்கெனவே எழுதப்பட்ட நிரல்களை அமேசான் ‘சிப்’களில் பயன்படுத்தலாம் என்று அதன் அன்னபூர்ணா லேப்ஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மென்பொருள் இலவசமாக வெளியிடப்படும். மேலும், மற்றவர்களும் இதனை மேம்படுத்தும் வகையில் திறந்த மூல மென்பொருளாகக் கிடைக்கும். சிலிக்கான் பள்ளத்தாக்கில் நடைபெறும் உருவாக்குநர்கள் மாநாட்டில் இதை அறிவிக்க அமேசான் திட்டமிட்டுள்ளது.

பெரும்பாலான ஏஐ உருவாக்குநர்கள் பைடார்ச் கட்டமைப்பைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிரல்கள் தனது ‘சிப்’களில் சிறப்பாக இயங்க, என்விடியா நிறுவனம் மென்பொருளைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக மேம்படுத்தியுள்ளது. இது அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. அமேசான் ‘சிப்’களைப் பயன்படுத்துவதற்கான படிகளைக் குறைப்பதே புதிய மென்பொருளின் நோக்கம் என்று அன்னபூர்ணா லேப்ஸ் துணைத்தலைவர் காலின் பிரேஸ் கூறினார்.

முந்தைய செய்தி
பிரதமர் எங்கே? நிலக்கரி தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் செய்தித்தாள் காகித உற்பத்தி நிறுவனங்கள்
அடுத்த செய்தி
Fine-variety rice sale begins in Tiruppur

தொடர்புடைய செய்திகள்