Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வாடிக்கையாளர்களுக்கு விளம்பரமற்ற சேவை - யூடியூப்-ஏர்டெல் ஒப்பந்தம்

வாடிக்கையாளர்களுக்கு விளம்பரமற்ற சேவை - யூடியூப்-ஏர்டெல் ஒப்பந்தம்

ஏர்டெல் தனது பொழுதுபோக்கு சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஏர்டெல் நிறுவனம், தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு யூடியூப் பிரீமியம் சேவையை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் விளம்பரமற்ற யூடியூப் அனுபவம், ஷார்ட்ஸ், பின்னணியில் காணொலிகளை இயக்கும் வசதி, இணையமின்றிப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது மற்றும் யூடியூப் மியூசிக் பிரீமியம் உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியும்.


திரைப்படங்கள், தொடர்கள் பார்க்கவும் உள்ளடக்க உருவாக்குநர்களைப் பின்தொடர்வதற்கும், இசையை கேட்பதற்கும், புதிய உள்ளடக்கங்களைக் கண்டறிவதற்கும் வாடிக்கையாளர்கள் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, ஏர்டெல் தனது பொழுதுபோக்கு சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.

யூடியூப் பிரீமியம் சேவை, ஏற்கெனவே ஏர்டெல் வழங்கி வரும் பிரைம் வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 பிரீமியம், சோனிலிவ் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களுடன் இணைகிறது. இச்சேவைகள் அனைத்தும் ரூ.200 ஓடிடி டாப்-அப் திட்டத்தின் கீழ், கூடுதலாக 30 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கின்றன.

இதனால், திரைப்படங்கள், தொடர்கள், இசை மற்றும் பிற டிஜிட்டல் உள்ளடக்கங்களை ஒரே மலிவான தொகுப்பில் அனுபவிக்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் வழங்குகிறது. செயலில் உள்ள ரீசார்ஜ் திட்டத்தை வைத்திருக்கும் அனைத்து ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களும் இந்த டாப்-அப் திட்டத்தைப் பெறலாம். இதை வாங்கிய பிறகு, ஏர்டெல் செயலியில் உள்ள ரிவார்ட்ஸ் மற்றும் ஓடிடி சேவைகள் பிரிவின் மூலம் யூடியூப் பிரீமியம் சலுகையைப் பெற முடியும்

முந்தைய செய்தி
Weapons and tactics blamed for injuring French protesters
அடுத்த செய்தி
HPCL refinances Rs 50,000 cr Rajasthan refinery debt

தொடர்புடைய செய்திகள்