கடலூர் மத்திய சிறையில் உள்ள 81 சிறைவாசிகள் எழுதிய 85 புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.
சிறைக்குள் முளைத்த சிறகுகள் என்ற தலைப்பில் சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு கலந்துகொண்டு 81 சிறைவாசிகள் எழுதிய 85 புத்தகங்களை வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசுகையில், எழுதுக இயக்கத்தின் சார்பில் கிள்ளிவளவன் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்களின் முயற்சியால் மத்திய சிறைச்சாலை கடந்த ஆறு மாதமாக சிறைவாசிகளுக்கு பயிற்சி கொடுத்து 81 பேரை எழுத்தாளர்களாக மாற்றி உள்ளது.
இது போன்று தமிழகம் முழுதும் உள்ள சிறைச்சாலைகளில் எழுத்தாளர்களை உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், வேலூர் சரக சிறைத்துறை தலைவர் சண்முகசுந்தரம், மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் பரசுராமன் கலந்து கொண்டனர். இந்த புத்தகங்களை நியூ செஞ்சுரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.