செட்டிக்குளத்தில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் 1.87 டன் வெங்காயம் ரூ.1.10 லட்சத்துக்கு ஏலம் போனது.
பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று 7-வது முறையாக சின்ன வெங்காயம் ஏலம் நடந்தது. அதில் 31 விவசாயிகள் 1.87 டன் அளவிலான சின்ன வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஏலத்தில் 15 வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 75-க்கு ஏலம் போனது. விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் மொத்த மதிப்பு ரூ.1.10 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.