Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எவால்வ் சோலார் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்: ஜான்டி ரோட்ஸ் திறந்து வைப்பு

எவால்வ் சோலார் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்: ஜான்டி ரோட்ஸ் திறந்து வைப்பு

இதன்மூலம் மின்சாரக் கட்டணம், மின் பயன்பாட்டின் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் தேவைகள் மதிப்பிடப்படும்.

பகிரவும் WhatsApp Facebook

வீடுகளுக்கான மேற்கூரை சூரிய மின்சக்தி தீர்வுகளை ஒரே இடத்தில் பெறுவதற்கு, சென்னையில் ‘எவால்வ் சோலார் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்’ என்ற புதிய மையத்தை தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் திறந்து வைத்தார்.


சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எவால்வ் எனர்ஜி குழுமம், 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது. இக்குழுமத்தின் எவால்வ் கிரீன் ஹோம்ஸ் நிறுவனம், 1,500க்கும் மேற்பட்ட வீடுகளில் மொத்தம் 3 மெகாவாட்டுக்கும் அதிகமான மேற்கூரை சோலார் மின் உற்பத்தித் திறனை நிறுவியுள்ளது.

இந்நிலையில், வீடுகளுக்கான மேற்கூரை சோலார் அமைப்புகளை நிறுவ விரும்புவோர், சோலார் பேனல்கள், இன்வெர்ட்டர்கள், நிறுவுதல் மற்றும் பராமரிப்பு சேவைகளுக்குப் பல்வேறு நிறுவனங்களை அணுக வேண்டிய நிலையை மாற்றும் நோக்கில் புதிய அனுபவ மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மின்சாரக் கட்டணம், மின் பயன்பாட்டின் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் தேவைகள் மதிப்பிடப்படும். தொடர்ந்து, பொறியாளர்கள் மேற்கூரையை ஆய்வு செய்து, பொருத்தமான சோலார் அமைப்பை வடிவமைப்பார்கள். உபகரணங்கள், நிறுவும் பணிகள், கிடைக்கக்கூடிய அரசு மானியங்கள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்த விவரங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு முன்மொழிவு வழங்கப்படும். மேலும், உபகரணங்களை வழங்குதல், நிறுவுதல், மானிய விண்ணப்பங்கள், நெட் மீட்டரிங் மற்றும் மின்விநியோக நிறுவனங்களிடம் பெற வேண்டிய அனுமதிகளுக்கான உதவி உள்ளிட்ட பணிகளையும் நிறுவனம் மேற்கொள்ளும்.

அமைப்பைச் சோதனை செய்து பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதுடன், நிறுவிய பிறகு உத்தரவாதச் சேவை, செயல்பாட்டுக் கண்காணிப்பு, பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புச் சேவைகளையும் ஒரே நிறுவனத்தின் மூலம் பெறலாம். இதுகுறித்து எவால்வ் எனர்ஜி குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் ஷா கூறுகையில்,
“வீட்டு உரிமையாளர்கள் சோலார் பேனல்களை ஒரு நிறுவனத்திடமும், இன்வெர்ட்டரை மற்றொரு நிறுவனத்திடமும் வாங்கிவிட்டு, நிறுவுதல் மற்றும் பராமரிப்புச் சேவைகளுக்குத் தனித்தனியாக நிறுவனங்களைத் தேட வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது.

ஏசியை அதன் பாகங்களாகப் பிரித்து வாங்குவதற்குப் பதிலாக முழுமையான தயாரிப்பாக வாங்குவதைப் போல, சோலார் அமைப்புகளும் ஒருங்கிணைந்த தீர்வாக வழங்கப்பட வேண்டும். வெளிப்படையான விலை நிர்ணயம், தெளிவான உத்தரவாதம் மற்றும் ஒரே நிறுவனத்தின் பொறுப்பில் முழுமையான சேவை வழங்குவதே எங்கள் நோக்கம்” என்றார்.

முந்தைய செய்தி
ஹிந்துஸ்தான் நேஷனல் கிளாஸ் ரூ.500 கோடி முதலீடு
அடுத்த செய்தி
விதிமீறிய ஆம்னி பேருந்துகள் ரூ.69.16 லட்சம் அபராதம்

தொடர்புடைய செய்திகள்