கண்ணாடி பாட்டில்கள் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் நேஷனல் கிளாஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், உற்பத்தியை அதிகரிக்க ரூ.300 கோடி முதல் ரூ.500 கோடி வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் மீதமுள்ள காலத்தில் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. நிறுவனத்தின் உரிமை மாற்றத்துக்குப் பிறகு இதுவரை ரூ.700 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.ஹரியானாவின் பகதூர்கர் ஆலையில் புதிய உலை செயல்பாட்டுக்கு வந்ததால், அங்கு தினசரி உற்பத்தித் திறன் 300 டன்னிலிருந்து 600 டன்னாக உயர்ந்துள்ளது. புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேச ஆலைகளிலும் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிறுவனம் தினமும் 2,500 முதல் 2,600 டன் வரை கண்ணாடிப் பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. உற்பத்தியை மேலும் அதிகரித்து, நிறுவனத்தின் லாபத்தை உயர்த்துவதுடன், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியையும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.