Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விதிமீறிய ஆம்னி பேருந்துகள் ரூ.69.16 லட்சம் அபராதம்

விதிமீறிய ஆம்னி பேருந்துகள்  ரூ.69.16 லட்சம் அபராதம்

விழா கால நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது உள்ளிட்டவைகள் கண்காணிக்க தமிழகம் முழுக்க குழு அமைக்கப்பட்டிருந்தது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகம் முழுவதும் விதிமீறிய ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகளால் ரூ.69.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


வார விடுமுறை, ஆயுத பூஜை என 4 நாள் தொடர் விடுமுறை வந்ததது. இதையடுத்து, சென்னையில் வசிக்கும் 4 லட்சம் வெளி மாவட்டம், மாநில மக்கள் வெளியூர்களுக்கு சென்றனர். இதையொட்டி சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள், வழக்கம் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன.

விழா கால நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது உள்ளிட்டவைகள் கண்காணிக்க தமிழகம் முழுக்க குழு அமைக்கப்பட்டிருந்தது. மாநிலம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், வாகன ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்ட 35 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இக்குழுவினர் அக்.15 இரவு முதல் அக்.18 காலை வரை 4,233 ஆம்னி பேருந்துகளில் ஆய்வு செய்தனர். அவற்றில் 778 பேருந்துகள் கூடுதல் கட்டணம், வரி ஏய்ப்பு உட்பட பல்வேறு விதிகளை மீறியது கண்டறியப்பட்டன. இயைதடுத்து, இந்த பேருந்துகளுக்கு, ரூ.14.38 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ரூ.3.83 லட்சம் அபராதம் உடனடியாக வசூலிக்கப்பட்டது.

அதேபோல் வெளிமாநில பதிவு எண்களில், தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட வரி செலுத்ததாத பேருந்துகளுக்கு ரூ.54.78 லட்சம் அபராதம் விதித்தனர்.

விநாயகர் சதுர்த்தியின் போது விதிமீறல்களில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட 7 பேருந்துகள் மீண்டும் விதிமீறலில் ஈடுபட்டது ஆய்வில் கண்டறியப்பட்டன. அந்த பேருந்துகளை சிறப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர். அதிலிருந்த பயணிகள் மாற்று பேருந்துகளில் சொந்த ஊருக்கு அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக நேற்று முதல் சென்னை திரும்ப ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்காக காரைக்குடி, மானாமதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, போத்தனூர், பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

சிறப்பு தமிழக பேருந்துகளுடன், ஆம்னி பேருந்துகளும் சென்னைக்கு புறப்பட்டன. தொடர்ந்து 3 நாளாக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் ஒரே நாளில் சென்னை திரும்புவதால், வெளிமாவட்டங்களில் இருந்து நேற்று புறப்பட்ட அரசுப் பேருந்துகள் நிரம்பி வழிந்தன.

இந்த பேருந்துகளை போக்குவரத்து துறை சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்படி நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடியும் வரை ஆம்னி பேருந்துகளை நிறுத்தி ஆய்வு செய்தனர். குறிப்பாக மாநில, மாவட்டங்களின் எல்லைகளில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
முந்தைய செய்தி
எவால்வ் சோலார் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்: ஜான்டி ரோட்ஸ் திறந்து வைப்பு
அடுத்த செய்தி
சிறப்பு பொருளாதார மண்டல பொருட்களை திரும்பப் பெற புதிய விதி

தொடர்புடைய செய்திகள்