ஐசிஐசிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 25 சதவீதம் உயர்ந்து ரூ.374.22 கோடியாக உள்ளது. பிரீமியம் வருவாய் அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும்.
கடந்த ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.299.26 கோடியாக இருந்தது. ஜூலை–செப்டம்பர் காலாண்டில் நிகர பிரீமியம் வருவாய் 16.5 சதவீதம் அதிகரித்து ரூ.13,804 கோடியானது. எனினும், மொத்த வருவாய் ரூ.12,015 கோடியிலிருந்து ரூ.11,742 கோடியாகக் குறைந்தது.
செப்டம்பர் 30 நிலவரப்படி, நிறுவனத்தின் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு ரூ.3.29 லட்சம் கோடியாகவும், கடன்தீர்க்கும் திறன் விகிதம் 229.9 சதவீதமாகவும் இருந்தது.
தனது 25 ஆண்டு பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, நிறுவனத்தின் பெயர் ‘ஐசிஐசிஐ லைஃப் இன்சூரன்ஸ் லிமிடெட்’ என மாற்றப்பட்டுள்ளது.