ஹெச்சிஎல்டெக் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 21.18 சதவீதம் அதிகரித்ததையடுத்து, அதன் பங்குகள் செவ்வாய்க்கிழமை எட்டு சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தன.
மும்பை பங்குச்சந்தையில் பங்கு விலை 8.28 சதவீதம் உயர்ந்து ரூ.1,321-லும், தேசிய பங்குச்சந்தையில் 8.42 சதவீதம் அதிகரித்து ரூ.1,326-லும் நிறைவடைந்தது.
நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.27,408 கோடி அதிகரித்து ரூ.3.58 லட்சம் கோடியானது. சென்செக்ஸ், நிஃப்டி நிறுவனங்களில் எச்சிஎல்டெக் அதிகபட்ச உயர்வைப் பதிவு செய்தது.
ஜூலை–செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,132 கோடியாகவும், வருவாய் 11.5 சதவீதம் உயர்ந்து ரூ.35,620 கோடியாகவும் இருந்தது.
செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளில் அதிக லாப விகிதமும், குறைந்த வரிச் செலவும் லாப வளர்ச்சிக்கு உதவின. பிற தகவல் தொழில்நுட்பப் பங்குகளும் உயர்ந்தன.