Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.11 லட்சம் கோடி மதிப்பீட்டில் ஜியோ IPO

ரூ.11 லட்சம் கோடி மதிப்பீட்டில் ஜியோ IPO

அக்டோபர் இறுதிக்குள் பங்குச் சந்தையில் பட்டியலிடவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், தனது முதல் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு ரூ.11 லட்சம் கோடி மதிப்பீட்டை இலக்காகக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் இறுதிக்குள் பங்குச் சந்தையில் பட்டியலிடவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து விவரமறிந்த நபர்களை கூறும்போது, பங்கு வெளியீட்டுக்கான முதலீட்டாளர் தேவையை மதிப்பிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. நிறுவன மதிப்பீடு மற்றும் பங்கு விலை குறித்து சாத்தியமான முதலீட்டாளர்களுடன் இந்த வாரம் ஆலோசனை தொடங்கப்படலாம்.


அக்டோபர் 19 தொடங்கும் வாரத்தில் பொதுப் பங்கு வெளியீட்டைத் தொடங்கி, அக்டோபர் 30-க்கு முன்பாகப் பட்டியலிட ஜியோ முயன்று வருகிறது. எனினும், பேச்சுவார்த்தைகள் தொடர்வதால் தேதிகள், மதிப்பீடு உள்ளிட்ட விவரங்கள் மாறக்கூடும். இதுகுறித்து ஜியோ தரப்பிலிருந்து உடனடியாக பதில் கிடைக்கவில்லை.
கடந்த ஜூனில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு ஆவணத்தின்படி, அதிகபட்சமாக 27 கோடி புதிய பங்குகளை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இது பங்கு வெளியீட்டுக்குப் பிந்தைய மூலதனத்தில் சுமார் 2.93 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.


உத்தேச மதிப்பீட்டில் வெளியிடப்படும் பங்குகளின் மதிப்பு ரூ.32,000 முதல் ரூ.32,500 கோடியாக இருக்கலாம். இது 2024-ல் ஹூண்டாய் மோட்டார் இந்தியா திரட்டிய ரூ.27,870 கோடியைவிட அதிகம் என்பதால், இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவாக அமையக்கூடும்.


இந்த மதிப்பீட்டில் பட்டியலிடப்பட்டால், ரிலையன்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல்லுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது அதிக சந்தை மதிப்புள்ள நிறுவனமாக ஜியோ இருக்கும். முன்னர் ரிலையன்ஸ் பிளாட்பார்மின் மதிப்பு 130 முதல் 170 பில்லியன் டாலர் என தகவல் வெளியானது. தற்போதைய 114 பில்லியன் டாலராக மதிப்பீடு இருக்கும் என கருதப்படுகிறது.


பங்கு வெளியீட்டுப் பணிகளுக்காக கோட்டக் மஹிந்திரா கேபிடல், மோர்கன் ஸ்டான்லி, சிட்டிகுரூப் உள்ளிட்ட 19 வங்கிகள் நியமிக்கப்பட்டுள்ளன. இறுதி பங்கு விலையும், வெளியீட்டு அட்டவணையும் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இவை முதலீட்டாளர்களுடனான ஆலோசனைகளுக்குப் பிறகு முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முந்தைய செய்தி
அமெரிக்காவுக்கு இந்திய ஜவுளி ஏற்றுமதி சரிவு
அடுத்த செய்தி
ஹாலிவுட்டில் உருவான புதிய நிறுவனம் - உற்றுநோக்கும் திரையுலகம்!

தொடர்புடைய செய்திகள்