பாகிஸ்தானின் 2025–26 நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி மதிப்பீடு 3.70 சதவீதத்திலிருந்து 3.65 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் சேவைத் துறைகளில் ஏற்பட்ட மந்தநிலையே இதற்குக் காரணம் என தேசிய கணக்குகள் குழு தெரிவித்துள்ளது. விவசாயத் துறை 3.50 சதவீதமும், தொழில்துறை 3.34 சதவீதமும், சேவைத்துறை 3.81 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை 3.6 சதவீதமாகவும், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி தலா 3.7 சதவீதமாகவும் கணித்துள்ளன.
பாகிஸ்தானின் பொருளாதார மதிப்பு 450.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இருப்பினும், அதிகரித்த பணவீக்கத்தால் மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.