Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கனரா வங்கியின் நிகர லாபம் 8.40%-ஆக உயர்வு

கனரா வங்கியின் நிகர லாபம் 8.40%-ஆக உயர்வு

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட, பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கிக்கு, நாடு முழுவதும் 10,146 கிளைகளும், 10,764 ஏடிஎம் மையங்களும் உள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் கனரா வங்கியின் நிகர லாபம் 8.40 சதவீதம் அதிகரித்து ரூ.5,175 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.4,774 கோடி நிகர லாபமாக ஈட்டியிருந்தது.

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட, பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கிக்கு, நாடு முழுவதும் 10,146 கிளைகளும், 10,764 ஏடிஎம் மையங்களும் உள்ளன. இதுதவிர, லண்டன், நியூயார்க், துபாய் மற்றும் குஜராத்தின் கிஃப்ட் சிட்டி ஆகிய இடங்களிலும் கிளைகள் உள்ளன.


இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான செப்டம்பர் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு குறைந்ததும், வட்டி வருவாய் அதிகரித்ததும் லாப உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.

இதன்படி, கடந்த செப்டம்பர் காலாண்டில் வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,339 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.1,504 கோடியாக இருந்தது. இதே போல், வங்கியின் நிகர வட்டி வருவாய் 20 சதவீதம் உயர்ந்து ரூ.11,004.75 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.9,141 கோடியாக இருந்தது.

மேலும், மொத்த வாராக் கடன்களின் விகிதம் ஜூன் காலாண்டின் 1.57 சதவீதத்திலிருந்து செப்டம்பர் காலாண்டில் 1.33 சதவீதமாகக் குறைந்தது. நிகர வாராக் கடன் விகிதமும் 0.36 சதவீதத்திலிருந்து 0.30 சதவீதமாகச் சரிந்துள்ளது.

செப்டம்பர் காலாண்டில் சில்லறைக் கடன் பிரிவில் 31.61 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. வீட்டுக் கடன்கள் 17.35 சதவீதமும், வாகனக் கடன்கள் 25.50 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன. 2026 செப்டம்பர் இறுதியில் வங்கியின் உள்நாட்டு வைப்புத்தொகை ரூ.15.47 லட்சம் கோடியாக இருந்தது.

மேலும், வாராக் கடன்களுக்கான ஒதுக்கீட்டுப் பாதுகாப்பு விகிதம் (பிசிஆர்) ஜூன் மாதத்தின் 94.76 சதவீதத்திலிருந்து செப்டம்பரில் 95.34 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இது 93.59 சதவீதமாக பதிவாகி இருந்தது.

இரண்டாவது காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தையில் கனரா வங்கிப் பங்கு விலை இன்றைய வர்த்தகத்தின்போது அதிகபட்சமாக 5.15 சதவீதம் உயர்ந்து ரூ.126.40-ஐ எட்டியது. வர்த்தக நேர முடிவில், சுமார் 4 சதவீதம் உயர்வுடன் பங்கு விலை ரூ.124.85 ஆக இருந்தது.

முந்தைய செய்தி
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர் விற்பனை
அடுத்த செய்தி
IPO நிதி பயன்பாட்டுக்கு கட்டாய கண்காணிப்பு: SEBI பரிந்துரை

தொடர்புடைய செய்திகள்