இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடும் விற்பனை அழுத்தத்தால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் நிறைவடைந்தன. அதிகபட்சமாக அதானி கிரீன் எனர்ஜி பங்கு 7.53 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
பிஎஸ்இயில் அதானி என்டர்பிரைசஸ் 5.43%, எனர்ஜி சொல்யூஷன்ஸ் 5.08%, பவர் 4.37%, அம்புஜா சிமென்ட்ஸ் 4.07% சரிந்தன. என்டிடிவி 3.73%, அதானி டோட்டல் கேஸ் 3.48%, ஏசிசி 3.05%, அதானி போர்ட்ஸ் 2.59% குறைந்தன. குழும நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.16.32 லட்சம் கோடியாக இருந்தது. நேற்று சந்தைகள் சரிவில் நிறைவடைந்தன.ஒட்டுமொத்த சந்தையின் கடும் சரிவுடன் அதானி குழுமப் பங்குகளும் வீழ்ந்தன.