Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மாயமான விமானம் - 6 பேரை தேடும் பணி தீவிரம்!

மாயமான விமானம் - 6 பேரை தேடும் பணி தீவிரம்!

விமானத்தில் இருந்த 4 கனடா நாட்டினர், 2 பெர்முடா நாட்டினர் என 6 பேரையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

நியூயார்க்:


பெர்முடாவில் இருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு 6 பேருடன் சென்ற மருத்துவ விமானத்தின் பாகங்கள், மசாசூசெட்ஸ் மாகாணம் நான்டக்கெட் தீவு கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விமானத்தில் இருந்த 4 கனடா நாட்டினர், 2 பெர்முடா நாட்டினர் என 6 பேரையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கனடாவில் பதிவு செய்யப்பட்ட கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி-100 ரக விமானம், பெர்முடாவின் எல்.எப்.வேட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை அதிகாலை பாஸ்டனுக்கு புறப்பட்டது. இதில் 4 பேர் விமானக் குழுவினராகவும், 2 பேர் மருத்துவப் பயணம் மேற்கொண்டவர்களாகவும் இருந்தனர்.
பாஸ்டன் நோக்கி சென்று கொண்டிருந்தபோது விமானத்தில் மின் கோளாறு ஏற்பட்டதாக விமானி தெரிவித்தார். 

மேலும் அவசரநிலையை அறிவித்தார். விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான கடைசி தகவல் பரிமாற்றத்தில், விமானி கருவிகள் செயலிழந்தது தெரியாமல் பறப்பதாகக் கூறியதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.
விமானம் சுமார் 24,000 அடி உயரத்தில் பறந்த நிலையில், சில நிமிடங்களில் 11,000–13,000 அடி உயரத்துக்கு திடீரென இறங்கியுள்ளது. அப்போது அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் சென்ற பாதையில் புயல் நிலவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அமெரிக்க கடலோர காவல் படை உறுதி செய்துள்ளது. ஒரு கடலோர காவல் படை கப்பல் இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டது. கனடா போக்குவரத்துத் துறையும் அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளை கண்காணித்து வருகிறது. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் சம்பவம் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருகிறது.

முந்தைய செய்தி
விண்வெளிப் பயணம் சொல்லும் ‘தூக்கத்தின் ரகசியங்கள்’
அடுத்த செய்தி
காலாண்டு விடுமுறை ஓவர்! - நாளை பள்ளிக்கு போக தயாராகுங்க!

தொடர்புடைய செய்திகள்