அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு என் பெயர் சூட்டலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
டென்னசி மாகாணத்தில் உள்ள கிளார்க்ஸ்வில்லில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் பேசுகையில், “மெக்சிகோ வளைகுடாவை 'அமெரிக்க வளைகுடா' என்றும், ஒண்டாரியோ ஏரியை 'அமெரிக்க ஏரி' என்றும் நாம் ஏற்கெனவே மாற்றியுள்ளோம். தற்போது ஒரு நதியும், பெருங்கடலும் நமக்குத் தேவைப்படுகின்றது. எனது பதவிக்காலம் முடிவதற்குள் ஒரு பெருங்கடலின் பெயரை மாற்ற வேண்டும் என்று கருதுகிறேன். அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு 'ட்ரம்ப் பெருங்கடல்' அல்லது 'அமெரிக்க பெருங்கடல்' என்று பெயர் மாற்றலாம்” என டிரம்ப் பேசினார்.இந்த உரையைக் கேட்டதும் கூட்டத்தில் இருந்தவர்கள் சிரித்தனர். மேலும், சமூக வலைதளங்களில் இது விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை 'ட்ரம்ப் நீரிணை' என்று பெயர் மாற்ற வேண்டும் என ட்ரம்ப் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். மேலும், ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறி, அதை 'ட்ரம்ப் நீரிணை' என்று குறிக்கும் வரைபடத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
ஏற்கெனவே தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் ட்ரம்ப் பலமுறை வலியுறுத்தியுள்ளார். இப்போது சமுத்திரத்துக்கு தனது பெயரைச் சூட்ட வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற ட்ரம்ப்பின் பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.க்ரி